Copy
முருக பக்தி கையேடு--பகுதி 3
Sri Valli-Teyvanai Samedha Murugan

முருக பக்தி கையேடு

பகுதி 3

எழுதியவர்: பேட்ரிக் ஹரிகன்

தமிழில் மொழிபெயர்ப்பு: சாந்திப்பிரியா

21 ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்று விளங்கும் முருக பக்தி மரபு உலகெங்கும் படர்ந்து கொண்டே வருகிறது. ஆனாலும் தமிழர்களிலும் ஒரு சிறிய பிரிவினர் அதை இன்னமும் புரிந்து கொள்ளவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை. ஒரு அமெரிக்க நாட்டை சேர்ந்த முருக பக்தர், முருக பக்தியின் தோற்றம், அதன் வரலாறு, தன்மை, மற்றும் பக்தி வழிபாடு போன்ற அனைத்தையும் 1970 ஆம் ஆண்டு முதல் தான் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் ஆராய்ந்து, இந்தக் கட்டுரை மூலம் அவற்றை விவரித்துள்ளார்.


பாவாக்கள்
பக்தி என்பது மனிதர்களின் மனக் கிளர்ச்சி மற்றும் உணர்ச்சிகளுடன் ஆழமாகக் கலந்து விடுவதினால், அதை வெளிப்படுத்தும் பக்தர்கள் தம்மை அறியாமலேயே அவற்றை பல்வேறு முகங்களோடு வெளிப்படுத்துகிறார்கள். அந்த  நிலைகளில் ஒன்றே பாவாக்கள் எனப்படும். பாவா என்பது உணர்ச்சிகளின் பல்வேறு வெளிப்பாட்டு முகங்கள் ஆகும். அதன் அளவும், நிலையும் அவரவர்களின் மனதில் எழும் பக்தி அல்லது மனக் கிளர்ச்சியின் உத்வேகத்தைப் பொறுத்தே அமைந்து இருக்கும்.

வைஷ்ணவ, சைவ, சாக்த மற்றும் குமார இறையியல்கள் என அனைத்திலுமே பாவாக்களை வெளிப்படுத்தும் நிலை உள்ளது. அந்த நிலை குரு மரபில் ஒருவர் கொண்டுள்ள ஆழமான அல்லது நெருக்கமான மன இணக்கத்தை வெளிக் காட்டுகிறது. பாவாக்களிலும் சாந்தமாக அமைதியாக இருந்தபடி கடவுள் மீதான அன்பை வெளிக் காட்டுதல், தாஸ பாவா அதாவது ஒரு குருவிடம் சீடர் வெளிப்படுத்தும் நடத்தை, சாக்ய பாவா அதாவது நண்பனைப் போன்ற மனப்பான்மையை வெளிப்படுத்தல்,  வாத்சல்ய பாவா அதாவது குழந்தையிடம் ஒரு தாய் காட்டும் மனப்பான்மை,  மற்றும் மதுர பாவா அதாவது தனது  மனதுக்கு இனியவர்களிடம்  ஒருவர் வெளிப்படுத்தும் மனத் தன்மை போன்ற நிலைகள் உள்ளன.

முதலில் சாந்த பாவாவுடன் முருக பக்தியை துவக்குபவர், எங்கோ தொலை தூரத்தில் உள்ளவர் போல காணப்படும் முருகனை தொந்தரவு செய்ய விரும்பாமல், அதே சமயம் அவரை நோக்கி ஒரு அடி முன்னேறும் விதமாக அவருடைய  எண்ணத்தை மனதில் ஏந்தியபடி அவர் நினைவுடன் இருப்பார்கள்.  அவருடைய அருளை உணரத் துவங்கியதும், தான் என்பது அற்பத்தனமானது என்பதை உணரத் துவங்கி, அவரையே தனது எஜமானனாக  நினைத்து, தான் அவருக்கு சேவகனாகவும் இருக்கும் மனப்பக்குவத்தை அடைகிறான்.  மேலும் அவருடன் நெருக்கம் அதிகரிக்கும்போது, முருகன் ஒரு தலைமைக் கட்டளை அதிகாரி அல்ல, அவரே தனக்கு மிக நெருக்கமான, உறுதுணையாக உள்ள நண்பரைப் போல உள்ளதை உணர்வார்கள்.

Bala Murugan அவரை எப்படி நெருங்குவது என்பதை நாம் அறியாவிடிலும், அவரே தக்க நேரத்தில் நம்மிடம் வந்து தம்மை வெளிப்படுத்திக் கொண்டு, நாம் நினைத்தும் பார்த்திடாத வகையில் நம்முடன் நெருக்கம் ஆகி விடுகிறார். அவரை குழந்தை கடவுளாகப் பார்ப்பவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். தமிழ் இனத் தாய்மார்கள், தமது குழந்தைகளையே முருகனாக பாவிப்பதினால் அவர்களுக்கு அவருடைய பெயர்களையே சூட்டுகிறார்கள் . பெண்களுக்கே அதிக  உணர்ச்சி வசப்படும் மன நிலைகளைக் கொண்டவர்கள் என்பதினால் பக்தி யோகத்தின் மேலான நிலையை அவர்களே கொண்டுள்ளார்கள்.

தனது மனதிர்கினியவர்களின் பிரிவைத் தாங்க முடியாமல் உள்ள நிலையில் அல்லது வெகு காலத்துக்குப் பிறகு ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது ஏற்படும்  பரவச  நிலையை போன்றே பக்தர்கள் வெளிப்படுத்தும் மதுர பாவா நிலை உள்ளது.  பாவா என்பதை  நடைமுறைப் பழக்கமாக தொடர்ந்து  வைத்திருக்கலாம், அல்லது வாய்ப்பு கிடைத்ததற்கு தகுந்தாற்போல அந்த பாவனையை அமைத்துக் கொள்ளலாம், அல்லது ஒரு குறிப்பிட்ட பாவாவை தாமே தேர்தெடுத்துக் கொண்டு அதை தமக்கே உரிய விதத்தில் செம்மைப்படுத்திக் கொள்ளலாம்.

தியானம் அல்லது முருகனின் ஆழ்ந்த நிலை நினைவில் திடமாக இருப்பதிலும் கூட பாவா வெளிப் படுத்தப்படுகிறது. எந்த நிலை பாவாவாக இருந்தாலும், அந்த நிலையில் உள்ளவர்களின் இதயமும் அதனுடன் இணைந்தே உள்ளது என்றாலும், அந்த பாபாவின் நிலை வெகு நேரம் நீடிப்பது இல்லை. ஆகவே முருகன் பக்தி நிலை என்பது எந்த அளவு ஒருவருடைய சாதனாவில் முக்கியப் பங்கு வகிக்கின்றது என்ற கேள்வி எழும்புகின்றது.

செயல்முறை சார்ந்த பக்தி
முருகன் என்பவர் யார் , அவர் அமைப்பு என்ன, அவருடைய வாழ்கை முறை என்ன மற்றும் அவரிடம் எப்படிப் தொடர்ப்புக் கொள்ள முடியும் போன்றவற்றை தெரிந்து கொள்ளவே முருக பக்தி மற்றும் கௌமாரம் என்பதில் சென்றேன். எனக்கு முருகனைப் பற்றி அனைத்தும்  தெரியும், பண்டையப் பாடல்களிலும், செய்யுட்களிலும் அவரைக் குறித்து நிறையவே எழுதப்பட்டு உள்ளன  என்பவற்றை கற்பனை நினைத்துக் கொண்டு    எமாளித்தனமாக  இருந்து விடக் கூடாது. முருகன் என்பது கற்பனை, அவர் நம்மிடம் இருந்து எட்டாத தொலைவில் உள்ளவர், மாபெரும் கடவுள், விளங்காத புதிர் மற்றும், வாழ்க்கையில் அவருடைய அருளை நம்மால் நேரடியாக அனுபவிக்க முடியாது என்ற எண்ணங்களை எல்லாம் நம் மனதில் இருந்து தீர்மானமாக  தூக்கி எறிந்து  வேண்டும்.

சரியான வாழ்கை முறை என்ன என்றால், நாம் நம்மையே தாழ்த்திக் கொள்வதையும், நாம் உபயோகமற்றவர்கள், நம்மால் அவற்றை  செய்ய முடியாது போன்ற தவறான எண்ணங்களை முதலில் நம்மிடத்தில் இருந்து வெளியேற்றி விட்டு, இயற்கை நமக்கு அளித்துள்ள திறமைகளை ஒன்றுபடுத்தி முன்னோக்கிச் செல்ல வேண்டும். ஒருவருக்கு சமிஸ்கிருதம், ஆங்கிலம் அல்லது தமிழ் மொழி தெரியுமா அல்லது  தெரியாதா  என்பது முக்கியம் அல்ல. ஆனால் கலங்காமல் இருந்து கொண்டு, ஒரு சொல், ஒரு எண்ணம் மற்றும் ஒரு வழி என்பதை முதலில் நாம் பழக்கிக்  கொள்ள வேண்டும்.

யோக வழி என்பதில் விரயமே கிடையாது. அதில் பெறப்படும் ஒவ்வொன்றும், அதைத் தொடர்ந்து அதற்கு மேலான நிலைக்கே நம்மை அழைத்துச் செல்லும்.  என்னைப் பொறுத்தவரை நான் சிலோனில் வாழ்ந்து வந்த வெளிநாட்டவன். முதலில் அறிவாற்றல் மிக்க புத்த தர்ம ஆன்மீகத்தினால் கவரப்பட்டு இங்கு வந்தவன். இந்திய கண்டம் முழுமைக்குமான கடவுள், விளங்காத புதிரானவர் ஆனால் அருள் மழை பொழிபவர் என்று கூறப்பட்டதை நம்பவுமில்லை, அவர் மீது பக்தி கொள்ள வேண்டும் என்பதையும் என் குடும்பம் எண்ணி இருக்கவில்லை.

பேட்ரிக் ஹரிகன் + ஜெர்மன் ஸ்வாமி  கெளரிபால 1983 ஆகவே உணர்ச்சிப் பூர்வமாக அல்ல என்னுடைய உள்ளுணர்வு மூலமே அவரை நான் முதலில் அறிய முடிந்தது.  ஜெர்மன் ஸ்வாமி  கெளரிபால உயிருடன் இருந்தவரை அவருடைய குருவிடம் இருந்து அவர் அறிந்து கொண்டவற்றை எனக்கு உபதேசமாக கூறத் துவங்கியதை ஏற்றுக் கொண்டிருந்த மன நிலையில் மட்டுமே நான் இருந்தேன்.

என்னைப் போலவே அவரும் தத்துவார்த்தமான எண்ணங்களைக் கொண்டவர். அவர் பூரண பக்தி செலுத்தி வந்தது அவருடைய ஆசானான நல்லூர் யோகஸ்வாமி மற்றும் அவர் தன்னுடைய  அம்மா எனக் கருதிய பராசக்தி  மீதுதான். ஸ்வாமி கௌரி பாலா நெஞ்சம் நிறைந்த சாக்தாவாக அதாவது அனைத்து உயிரினங்களுமே பராசக்தியின் குழந்தைகளே என முழுமையாக நம்பியவர்.

கதிர்காம பாத யாத்திரை1972 ஆம் ஆண்டு கதிர்காம பாத யாத்திரைத் துவக்கினேன். அறிவு முதிர்ந்த முருக பக்தர்களுக்கு இடையில் மூன்று மாதங்கள் தொடர்ந்து கொண்டிருந்த அந்த யாத்திரையே என் உள்ளத்தில் முருக பக்தி வேர் விட்டத்தின் காரணம். அதன் பின்னர் 1988 ஆம் ஆண்டு முதல் 19 ஆண்டுகளாக அந்த பாத யாத்திரயை ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து செய்து கொண்டு வந்துள்ளேன். 

நீடித்த அனுபவங்களைக் கொண்ட ஸ்வாமிகள் மற்றும் ஸ்வாமி அம்மாக்கள் போன்றவர்கள் இரண்டு மாதங்கள் தொடர்ந்து நடந்து செல்ல வேண்டி இருந்த   அந்தப் பாத யாத்திரைப் பயணத்தில்  வழியில் ஒவ்வொரு புனித இடங்களுக்கும் விஜயம் செய்தப் பின் முடிவாக பதினைந்து நாட்கள் விழா நடைபெறும் கதிர்காமனை சென்றடைவார்கள். நிறை மனதுடன், நெஞ்சார கதிர்காமனை இதயத்தில் வைத்திருந்த நானும் அவர்களுடன் அந்த பாத யாத்திரையில் கலந்து கொண்டு வந்துள்ளேன். ஆனால் பாத யாத்திரை செய்யாத அடுத்த ஒன்பது மாதங்களில் நான் என்ன செய்தேன்?

பேட்ரிக் ஹரிகன் 1987ஸ்வாமி கௌரிபாலவின் விருப்பபடி மூன்று அமெரிக்க கல்லூரிகளில் பல ஆண்டுகள் படித்து தென் ஆசிய நாடுகளின் மொழிகளை நான் கற்றறிந்தேன். கதிர்காமனின் பண்டைய வழிமுறையிலான  குரு தீட்ஷை குறித்த ஆய்வு செய்ய வேண்டும் என்பதற்காக நான் மேற்கொண்ட கல்வி அது . அதைத் தவிர இந்தியவியல் என்பதிலும் பட்ட மேற்படிப்பு படித்து முடித்தேன். அவற்றைப் முடித்துக் கொண்ட நான் கிழக்கு முதல் மேற்கு வரையிலான இடங்களில் தோன்றி இருந்த தனிச் சிறப்பு வாய்ந்த கதிர்காமானின் இனக் கலப்புப் மரபை ஆய்வு செய்தேன். 

அந்த ஆய்வில், உணவுப் பொருள்கள் தருவித்துக் கொடுப்பதைத் தொழிலாகக் கொண்டிருப்பவர் போன்று, முருகனின் போலித்தனமான நம்பிக்கைகளையும் எண்ணங்களையும் கொண்டு வந்தவர்கள் என்ற பார்வையில் முருக பக்தர்களைக் பார்க்காமல், உள்ளூர் வேதாக்களின் பண்டைய கால வழி, வழி மரபான எண்ணங்களுடன் அவர்களது எண்ணங்களையும்  ஒன்று சேர்த்தே ஆராய்ந்தேன். முக்கியமாக அவர்கள் எதையாவது முக்கியமாகக் கருதி இருந்தாலோ, அல்லது உண்மை என்று நம்பி இருந்தாலோ அவற்றுக்கான காரணங்களையும், அதனால் அவர்கள் கொண்டிருந்த உலகப் பார்வையையும் நான் நன்கு ஆராய்ந்து பார்த்தேன்.

மேற்கத்தைய ஆராய்ச்சியாளர்களும் மனித சமுதாயத்தின் வளர்ச்சி-இயல்பு ஆகியவை ஆராய்ந்தவர்களும் மேற்கொண்ட வழி முறைகளுக்கு மாறாக முதலில் நான் இலங்கையினர் சிரத்தையுடன் வழிபாட்டு வந்த  கதிகாமக் கடவுளின் பக்தர்களிடம் அவரைக் குறித்தும், அவருடனான அவர்களது நிலைப்பாட்டைக் குறித்தும் கேள்விகளை எழுப்புவதற்கு முன்னர், நான் என்ன செய்ய உள்ளேன் என்பதை அவரிடம்  எடுத்துக்  கூறி அந்த நோக்கத்திற்கான அனுமதியை அவரிடமே வேண்டினேன்.

நான் மேற்கொள்ள இருந்த இப்படிப்பட்ட ஆராய்ச்சி நிலையை வெளிப்படையாகக் கூறி அதை நியாயப்படுத்தி பேசியதினால், 1989 ஆம் ஆண்டில், கலிபோர்னியாவை சேர்ந்த பெர்கிலி பல்கலைக் கழகத்தை சேர்ந்த எனது ஆராய்ச்சியை ஆய்வு செய்த அங்கத்தினர்களுடைய வெறுப்பை சம்பாதித்துக் கொள்ள, மேல் முறையீடு கூட செய்ய முடியாதபடி, முறையற்ற முறையில் என்னை  அந்த  துறையில் இருந்து வெளியேற்றி விட்டார்கள். அந்த தற்காலிக இடையூறு, இனி என்னுடைய ஆராய்ச்சிகளை  தடை இன்றி மேற்கொள்வதற்காக கதிர்காமனே எனக்கு ஏற்படித்திக் கொடுத்த சந்தர்ப்பமாகவே  நான் நினைத்துக் கொண்டேன்.

என்னுடைய முதலாவது கட்ட ஆராய்ச்சி சாந்த பாவனாவை கொண்டது. அதில் ஒரு தெய்வத்திற்கு தரவ வேண்டிய மரியாதையைத் தந்து விட்டு, ஆனால் அதே சமயம் அமைதியாக , அவரிடம் இருந்து தொலை தூரத்தில் இருந்து கொண்டு, சிறிதளவு மனதில் அவ நம்பிக்கையையும் கொண்டிருந்தே எனது  ஆய்வை துவக்கினேன். ஆனால் சில காலத்துக்குப் பிறகு நான் விரும்பிக் கேட்டிருந்த வேலையையே எனக்கு கதிகாமன் தந்து உள்ளார் என்பதை உணர்ந்தபோது, அவரிடம் நான் காட்டிய பாவா தாஸ்ய பாவாவாக மாறி இருந்தது.
 
Copyright © 2012 Murugan Bhakti, All rights reserved.
Email Marketing Powered by Mailchimp