4தமிழ்மீடியா வாராந்த மின்னஞ்சல் - மார்ச் 2013 இன் 1வது வாரத்தில் தெரிவுசெய்யப்பட்ட பதிவுகள்!
 திருப்பூர் ஜோதிஜியின் டாலர் நகரம் நூலைப் பெறுவதற்கு இங்கே! 4தமிழ்மீடியாவின் வெளியீட்டில் உருவாகிய ஜோதிஜியின் டாலர் நகரம் புத்தகத்தை பெற விரும்புகின்றவர்கள் கீழுள்ள படிவத்தில் உங்கள் பெயர் மின்னஞ்சல் ஐடி வீட்டு முகவரி தொலைபேசி இலக்கம் போன்ற விபரங்களை பதிவு செய்து இறுதியிலுள்ள Submit  பட்டனை ஒருமுறை அழுத்துங்கள்!
No Fire Zone ஆவணப்படத்தை உலகம் பார்க்க நீங்கள் என்ன செய்யலாம்?இயக்குனர் கெலம் மெக்ரே இப்படி கூறுகிறார். 'உண்மை மூலமே நீதியை தேட முடியும். நீதி மூலமே அமைதியை தேட முடியும். ஆக இங்கு உண்மைகள் வெளிக்கொணரப்படுவது முக்கியம்' அதில் உங்கள் பங்களிப்பு எப்படி இருக்க போகிறது? என்பதனை அலசுகிறது இப்பதிவு.

ஆதிபகவன் : திரை விமர்சனம்

பித்த நாடியை பிடிச்சு பார்த்த வைத்தியரு சப்த நாடியும் ஒடுங்கி சுருண்டு விழுந்தா எப்படியிருக்கும்? அப்படிதான் விழுந்து கிடக்கிறார்கள் ரசிகர்கள். அமீரிடமிருந்து இப்படியொரு படத்தை யாருமே எதிர்பார்த்திருக்கப் போவதில்லை!
சிவலிங்க தரிசனம்
எல்லாம் வல்ல சிவன் அவர் அருவம் உருவம் அருவுருவம் அற்றவர். அருவமாய் எங்கும் வியாபித்து நிற்பவர்.
 விஜய்யோடு நடிக்கிறார் ஜீவா ரஜினி படத்திற்கு ஆர்.வி.உதயகுமார் வைத்திருந்த 'ஜில்லா கலெக்டர்' என்ற டைட்டிலில் கலெக்டரை மட்டும் உருவிவிட்டு ஜில்லாவை வைத்துக் கொண்டிருக்கிறார்
 இணையம் வெல்வோம் -2 இணையமும் , தமிழும்,  தமிழரசனுக்கு இது இரண்டுமே நன்றாகத் தெரிந்திருக்கிறது என்பதை, வீக்கிலீக்ஸ் பற்றி உலகமே பரபரத்துக் கொண்டிருந்த வேளையில், அக்குவேறு ஆணிவேறென ' சுடுதண்ணி 'வலைப்பதிவில் தொடராக இவர் எழுதியபோதே தெரிந்து கொண்டோம்.
 ஒரு ஓவியத்தால் இசைக்க முடியுமா? : (வீடியோ) ஒரு ஓவியம் 1000 சொற்களின் அர்த்தத்தை சொல்லிவிடும் எனில், ஏன் ஒரு ஓவியம், இசைப்பாடலை வெளிப்படுத்த முடியாது?
'ஈழத் தமிழர்களின் அடுத்த தலைமுறையும் ஆயுதம் தூக்குவதற்கு நாம் காரணமாகப் போகின்றோம்' : ஜெனிவாவில் கெலம் மக்ரே'-நான் அதிகம் பேசவில்லை. இப்படம் பேசட்டும். தங்களது மீட்பு நடவடிக்கையில் ஒரு பொதுமகன் கூட உயிரிழக்கவில்லை.  யுத்தமற்ற பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தமது இராணுவம் எந்தவொரு விமானக்குண்டுவீச்சையும் நிகழ்த்தவில்லை என்கிறார்கள். அவர்கள் சொன்னது உண்மையா என்பதற்கு இந்த படம் பதில் சொல்லும்' என்றார் இயக்குனர் கெலம் மெக்ரே.
 மனித உரிமைகளுக்கான ஜெனிவா சர்வதேச திரைப்பட விழா : ஒரு பார்வைஹாரர், சயன்ஸ் பிக்க்ஷன், அனிமேஷன்,  குறுந்திரைப்படம் போன்று மனித உரிமைகளுக்கும் சர்வதேச திரைப்பட விழாக்கள் நடைபெறுவது எத்தனை பேருக்கு தெரிந்திருக்கிறது? அப்படியே தெரிந்திருந்தாலும் எத்தனை பேர் அதில் காட்சிப்படுத்தப்படும் சினிமாக்களை பார்க்க வருகிறார்கள்?
 உலகம் முழுதும் சுமார் 360 மில்லியன் பேர் கேட்கும் திறன் அற்றவர்கள் : உலக சுகாதார அமைப்பு சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமைச் செயலகம் சமீபத்தில் விடுத்த அறிக்கை ஒன்றில் உலகம் முழுதும் சுமார் 360 மில்லியன் பேர் செவிட்டுத் தன்மையால் பாதிக்கப் பட்டவர்கள் எனக் கணிப்பிடப் பட்டுள்ளது.
 மொரீஷியஸ் கடலுக்கு அடியில் 2 பில்லியன் வருடம் பழமையான கண்டம் கண்டுபிடிப்பு சமீபத்தில் இத்தீவின் கடற்கரை ஓரமாக உள்ள மணல் குறுணிகளை ஆராய்ந்ததில் அதன் அருகே இந்து சமுத்திரத்தின் அடியில் பல மில்லியன் வருடங்கள் பழமையான ஒரு மைக்ரோ கண்டம் இருந்ததற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
 சுனோ சுனோ சுனோ ..சிதம்பரம் ஜி! 2013 - 14ண்டிற்கான மத்திய பொது பட்ஜெட் குறித்த ஒரு பார்வையாக வரும் இந்த வீடியோ,
 ஒபாமா வழியில் உருத்திர குமாரன் : உருவாகுமா தமிழீழ அரசு...? "தமிழீழ விடுதலையை துரிதப்படுத்த ஒபாமாவின் ஆசியப் போராட்டத்துக்கு ஆதரவாகக் காய் நகர்த்த வேண்டும்" எனக் கூறியுள்ளார் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்திரகுமாரன்.
கண்ணாடிகளால் உலகம் உண்மையில் சாத்தியமானதா? - வீடியோகண்ணாடிகளில் தொடுதிரை மூலம் செயற்படுத்தக்கூடிய விடயங்களில் எது சாத்தியமானது அல்லது எது சாத்தியமற்றது என்பது பற்றி அலசுகின்றது இந்த வீடியோ காட்சிகள்.
 ஒரு கிலோமீட்டரை விட உயரமாக சவுதியில் அமைக்கப் படவுள்ள கிங்டம் டவர் உலகின் மிகப்பெரிய கட்டடமான டுபாயில் உள்ள பூர்ஜ் கலிஃபா ஐ விட உயரமாக அதாவது சுமார் 1 கிலோமீட்டருக்கும் அதிகமான (1401 மீற்றர்) உயரமுடைய ஒரு கட்டடத்தை சவுதி அரேபியாவில் அமைக்க லண்டனைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் ஒன்று திட்டமிட்டுள்ளது.
 கூகுள் , பேஸ்புக் பற்றி தொழில்நுட்ப உலகத்தினருக்கு இதுவரை தெரியாத இரகசியங்கள் : 3 4தமிழ்மீடியா பயனுறு இணைப்பு பகுதியின் முந்திய பதிவொன்றில் கூகுளின் டேட்டா சென்டர் பற்றி இரு தொகுப்புக்களை வெளியிட்டுருந்தோம்.
 ஹரிதாஸ் விமர்சனம் ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வருகிற ரசிகனை, பார்கிங் டோக்கனை மறக்கடித்து, பாதையை மறக்கடித்து கிட்டதட்ட அவனையே மறக்கடிக்கிற வித்தை தெரிந்த இயக்குனர்கள் தமிழ்சினிமாவில் எப்போதாவதுதான் காணக் கிடைப்பார்கள்.
இணையம் வெல்வோம் -3 திடீரென்று உங்கள் வீட்டுக் கதவைத் தட்டி காவல்துறையின் சீருடையில் ஒருவர் அதிகாரத் தோரணையில் விசாரித்தால் அனேகம் பேர் நிச்சயம் அந்த நபர் தங்கபதக்கம் சிவாஜியோ அல்லது வால்டர் வெற்றிவேல் சத்யராஜாகவோ தான் இருக்க வேண்டும் என்று நம்பி. கடகடவென நேற்று வைத்த மீன் குழம்பு முதல் இன்று காலை பல் விளக்கியது வரை விவரித்து புல்லரிக்க வைத்து விட வாய்ப்பிருக்கிறது.
Copyright © 2013 4TamilMedia, All rights reserved.